அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் தற்போது அவரது தலைமையின் கீழ் இயங்க போகும் முக்கிய துறையில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ளார்.
Also Read : கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்
இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்கும் முன்னரே பல முக்கிய துறைகளில் கைதேர்ந்தவர்களை டிரம்ப் நியமித்து வரும் நிலையில் தற்போது அவரது தலைமையின் கீழ் இயங்க போகும் முக்கிய துறையில் தமிழருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு துறைக்கான ஆலோசகர் பதவிக்கு தமிழரான ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
ஸ்ரீராம் கிருஷ்ணன் டிவிட்டர், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்பில் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.