மலேசியாவிற்கு செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
தாய்லாந்து, இலங்கை நாடுகளைத் தொடர்ந்து மலேசியாவுக்கும் இந்தியர்கள் விசா இல்லாமல் சென்று வரலாம் என்ற அறிவிப்பை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பிறகு சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் சுற்றுலாத் துறையை நம்பி இருந்த நாடுகள் மீண்டும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாட்கள் வரை மலேசியாவில் தங்க இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு பிறகு 31 நாட்கள் தங்குவதாக இருந்தாலும் பயணிகள் கட்டாயம் விசா பெற வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பு ஏற்கனவே குற்ற வழக்குகளைக் கொண்டவர்களுக்கு பொருந்தாதுஎன்று மலேசியப் பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.
முன்னதாக ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மலேசியாவில் 9.16 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.