கேரளாவில் ஓடும் ரெயிலில் மாணவிகளின் எதிரே ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஓடும் ரெயிலில், பள்ளி மாணவிகளின் எதிரே அமர்ந்து கொண்டு ஒரு நபர் ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையிலும், இது குறித்த வீடியோ ஆதாரத்துடன் காவல் துறையியினர் அந்த நபரை தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து, அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரெயிலில் மாணவிகளின் முன் நபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.