பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில், மணிமேகலை போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கசிந்து வருகிறது. இது உண்மையா? அல்லது வதந்தியா? என்று தெரியாமல், நெட்டிசன்கள் குழம்பி போய் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்குகிறது. விஜய் டிவி இதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த முறை பிக் பாஸ் 8 சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
வழக்கமாக பிகஃபாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் யார் யார் என்பதை தெரிந்து கொள்ள, மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதற்கான கணிப்புகளும், நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே ஆரமித்துவிடும்.
அதேபோல இந்த முறையும் பிக்பாஸ் வீட்டிற்குள் வீட்டிற்குள் செல்வது இவரா? அவரா? என்று மிகப்பெரிய விவாதமே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல்கள் எதுவுமே வெளியாகவில்லை.
வெறும் யூகங்களின் அடிப்படையில் சிலரது பெயர்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், இதில் தொடர்ந்து அடிபடும் பெயர் மணிமேகலை தான்.
ஆனால், இது இணையவாசிகளை குழப்பி விட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், பிரியங்கா மீதான குற்றச்சாட்டுகளை வீசிவிட்டு விஜய் டிவியை விட்டு வெளியே வந்த மணிமேகலைக்கு, விஜய் டிவி மீண்டும் எப்படி வாய்ப்பு தருவார்கள் என யோசிக்க வேண்டியுள்ளது என்று கேட்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், விஜய் டிவியில் உள்ள பிரபலங்களே, மணிமேகலைக்கு எதிராக “செருப்பு, துடைப்பம்” என்று கமெண்ட்களை வீசி வரும் சூழலில், மீண்டும் அவர்களுடன் மணிமேகலை எப்படி பணியாற்றுவார்? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
மணிமேகலையை தயாரிப்பு நிறுவனம் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிவிட்டது. மணிமேகலையை ஒன்றும் தானாக வெளியேறவில்லை என்று ஆர்.ஜே. ஷா வீடியோ பதிவிட்டு கூறியிருந்தார். இந்த வீடியோவை அவர் டெலிட் செய்துவிட்டாலும், கிட்டத்தட்ட இதே கருத்தைதான் பிரபல நடிகை ஷகீலாவும் கூறியிருந்தார்.
4 நாட்களுக்கு முன்பு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், “இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மணிமேகலையை அனுப்புவதற்காகவே இப்படியொரு நாடகம் நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன..
ஏனென்றால், பரபரப்பு சம்பவங்களை செய்து, மீடியாவில் பெரிதளவில் பேசப்பட்டால்தான், மக்களின் சப்போர்ட் கிடைக்கும், அப்போதுதான் பிக்பாஸ் வீட்டிற்குள் எளிதாக நுழைய முடியும். எனவே, அதற்கான நாடகம் இது என்றெல்லாம் சொல்கிறார்கள்.
மணிமேகலை – பிரியங்கா விவகாரம், குக் வித் கோமாளியின் டிஆர்பிக்காக நடத்தப்பட்ட நாடகமா? அல்லது பிக்பாஸ் சீசன் 8-க்காக நடத்தப்பட்ட நாடகமா? என்று இனிமேல்தான் தெரியவரும்” என்று செய்யாறு பாலு கூறியிருந்தார்.
எப்படி பார்த்தாலும் மணிமேகலை மீண்டும் விஜய் டிவி-க்கோ அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ கலந்து கொள்ள வாய்ப்பு குறைவு தான் என்பது அனைவரும் அறிந்ததே..