Govt Hospital Atrocity by Narcotics : மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமியின் அராஜகம்.. போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
இதையும் படிங்க : E Pass மூலம் ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?
“மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது.
போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே,
தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.
கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில்,
இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் Govt Hospital Atrocity by Narcotics.