தேர்தல் பரப்புரையின்போது ஏற்ப்பட்ட உடல்நல கோளாறால் மருத்துவமனையில் ( mansoor ali khan ) அனுமதிக்கப்பட்டிருந்த மன்சூர் அலிகான் இன்று பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ( நாளை ) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடும் இந்திய புலிகள் ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான், நேற்று தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
Also Read : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு..!!
பிரச்சாரத்தின் இறுதி நாளான அன்று 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் சுயேட்சை வேட்பாளராக நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் கூறினார்.
இதையடுத்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக அவரை வேலூர் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தற்போது அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அது தொடர்பான சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ( mansoor ali khan ) மன்சூர் அலிகான் தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.