“அமெரிக்காவின் பிரபல கால்பந்து அணிக்காக விளையாட ஒப்பந்தமானார் மெஸ்ஸி” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் அதிகம் விருப்பப்பட்டு கண்டு ரசிக்கும் விளையாட்டு எது என்றால் அது நிச்சயம் கால்பந்து விளையாட்டு தான்.அந்த விளையாட்டின் முடிசூடா மன்னனாக வலம் வரும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்தியாவில் எப்படி கிரிக்கெட் விளையாட்டுக்கு மிக பெரிய ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல் உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டுக்கும் , விளையாட்டு வீரர்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் இருக்கும் நட்சத்திர வீரர்களில் ஒருவராக வலம் வரும் லியோனல் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணியில் இருந்து விலகுவதாக சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார் .அவரின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி உலக மக்கள் எதிர்பார்த்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின், இறுதி சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை பட்டத்தை பெற்று சாதனைப் படைத்தது .

இதையடுத்து தேசிய அணியை தவிர்த்து நட்சத்திர வீரர் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. எனப்படும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்த நிலையில் அந்த அணியை விட்டு விலகினார்.

சமீபத்தில் மெஸ்ஸி பி.எஸ்.ஜி. அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி சவுதி அரேபியாவுக்கு யாருக்கும் சொல்லாமல் சென்றார். இந்த நிகழ்வு பி.எஸ்.ஜி அணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாகவே மெஸ்ஸி அணியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான லியோனல் மெஸ்ஸி அடுத்ததாக எந்த அணியில் இணைவார் என்றும் அந்த அணியில் அவர் எத்தனை கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார் என்ற அப்டேட்டுக்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்தனர் .

அந்தவகையில் தற்போது தான் இணையவுள்ள புதிய அணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மெஸ்ஸி. அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக தான் விளையாட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பிஎஸ்ஜி அணியில் இருந்து விலகிய நிலையில் மெஸ்ஸி அவர்களை வாங்க பல நாட்டின் பிரபல கால்பந்து அணிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்க நினைத்தது . சவுதி அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணி ஒரு பில்லியன் டாலர் கொடுத்து ஒப்பந்தம் செய்ய பல முறை முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் பல அணிகள் முன்வைத்த பில்லியன் டாலர் ஒப்பந்தங்களை நிராகரித்து அமெரிக்காவின் இண்டர் மியாமி அணிக்காக தான் விளையாட முடிவு செய்துள்ளதாக மெஸ்ஸி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளது .

Total
0
Shares
Related Posts