அமெரிக்காவின் 47 ஆவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு மெட்டா நிறுவனம் சுமார் 216 கோடி ருபாய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2021ல் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து, அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கணக்குகளை மெட்டா நிறுவனம் முடக்கியது . இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்திருந்தார் ட்ரம்ப்.
Also Read : அப்பாவி மக்கள் உயிரிழப்புகளுக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் – செல்வப்பெருந்தகை
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெட்டா நிறுவனம் மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும் , அவருக்கு $25 மில்லியன் ரூ 216 கோடி வழங்குவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது .