Mettupalayam – Coimbatore double reserve line : மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில்,
மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி,
மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கி உள்ளார்.
இதையும் படிங்க : “நாய் கூட பிஏ பட்டம் வாங்குகிறது” என கூறியது ஏன்? ஆர்.எஸ் பாரதி விளக்கம்!!
இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், (Mettupalayam – Coimbatore double reserve line)
“கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை, இன்று இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினேன்.” என தெரிவித்துள்ளார்.