BREAKING || தமிழகத்தில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்துள்ளதாக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்(anbil mahesh) தெரிவித்துள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் என கூறப்படுகிறது.
இதனால் நேர பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் எனவும் மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்
என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்(anbil mahesh) தெரிவித்துள்ளார்.