பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்த விசிக பிரமுகர் மற்றும் எம்ஜிஆர் பக்தன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது செயல்பாடுகள் திருவெறும்பூர் தொகுதி திமுக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக தலைமை இடத்தில் மிகுந்த நெருக்கமாக இருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில சீனியர் நிர்வாகிகளை கண்டுகொள்ளாமலும், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் யாரையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் திமுக நிர்வாகிகள் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் இந்த அமைச்சரால் திருவெறும்பூர் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. நாங்கள் பெல் நிறுவனத்தில் 45ஆண்டு காலமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம் எங்கள் கோரிக்கையை எவ்வளவு கொடுத்திருக்கிறோம்
அதை அவர் கண்டுகொள்ளவில்லை.
நாங்கள் இனிமேல் அவருக்கு ஓட்டு போட மாட்டோம் நாங்க நோட்டோவுக்கு தான் ஓட்டு போடுவோம். அவர் இனிமேல் இந்த தொகுதியில் எம்.எல்.ஏவுக்கு நிற்க வேண்டாம்னு சொல்லுங்க. வேஷம் போடுகிறார் என விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகி இளந்தமிழனின் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.