அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது . இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள் , மற்றும் திமுகவினர் பலர் கலந்துகொண்டனர். மேலும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசியது நகைச்சுவையாக இருந்தாலும் சில பேச்சுக்கள் சர்ச்சையையும் ஏற்படுத்தியது .
அதில் திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம் உள்ளனர் என நடிகர் ரஜினி தெரிவித்த கருத்து பற்றிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று செய்தியாளகர்ளை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :
பல்லு போன நடிகர்கள் தொடர்ந்து நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை. மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி தாடி வளர்த்து நடிக்கின்றனர். வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. இதையெல்லாம் மறந்துட்டு ஏதோ ஒண்ணு பேசுறாரு என அமைச்சர்
துரைமுருகன் தெரிவித்துள்ளார்.