தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 5 மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாக மருத்துவம் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, 26 ஆயிரம் முகாம்கள் மூலம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 8,36,796 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6,43,91,902 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்று கூறிய அமைச்சர், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை தெரிவித்து நிறுவனங்களுக்கு கடிதம் எழுத உள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். 450 ஆக இருந்த டெங்கு பாதிப்பு 532 ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.