அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், , பொறுக்கி ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் ஒளிஞ்சிக்க என பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி (amarprasadreddy)பதிலடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்பொழுது நாடாளுமன்ற மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோலுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆதீனங்கள் தேவாரம் பாடி சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பூஜை முடிந்ததும் பிரதம நரேந்திர மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கினார்.
இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மூச்சு இருக்கா.. மானம் ? ரோஷம் இருக்கா ?என திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த பதிவு பாஜகவினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பதிவில், பொறுக்கி ஒழுங்கா நாளைக்கு அறிவாலயத்தில் போய் ஒளிச்சுக்க..என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர் மனோ தங்கராஜிற்கு அமர் பிரசாத் ரெட்டி(amarprasadreddy )சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் ஜூன் நான்காம் கன்னியாகுமரியில் தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. உங்களுக்கு மானம் ரோஷம் மூச்சு இருந்தா நிப்பாட்டி பாருங்க என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் திமுக அமைச்சரை தகாத வார்த்தைகளால் பேசிய அமர் பிரசாத் ரெட்டியை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.