நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு(manothangaraj) பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நேற்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதோடு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவினார்.இந்த தருணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை என பலரும் கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்த நாடாளுமன்றத்திற்கு வந்த மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது.பின்னர் அங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் 12 மத தலைவர்கள் கலந்து கொண்டார்.பின்னர் நாடாளுமன்றத்தில் நிறுவ இருந்த செங்கோலுக்கு ஆதினங்கள் தேவாரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர் பூஜைகள் முடிந்ததும் பிரதமர் மோடி செங்கோல் முன்பு முடிந்து வழங்கினார். அவரை அனைத்து ஆதினங்களும் ஆசி வழங்கினர்.இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால், மறுபுறம், நாடாளுமன்றதிற்கு வெளியே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மல்யுத வீரர் வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற நோக்கி பேரணியில் ஈடுபட முயன்ற பொழுது அவர்களை தடுத்த நிறுத்திய பாதுகாப்பு படையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பதக்கங்களை வாங்கித் தந்த வீர வீராங்கனைகளை பாஜக மோசமாக நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றர்.
இந்த நிலையில்,இது தொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அதில், உரிமைக்காக போராடும் மல்யுத்த வீரர்களை குறைத்து மதிப்பு விட்டு, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனநாயகத்தின் கோவில் என்று பிரதமர் மோடி பொய் சொல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
செங்கோல் மற்றும் கட்டிடங்களை விட ஒருவரின் செயலை சத்தமாக பேசும் என்று தெரிவித்த அவர்,பிரதமர் மோடி செங்கோலின் முன்பு விழுந்து வணங்கிய புகைப்படத்தை பதிவிட்டு, மூச்சு இருக்கா.. மானம்? ரோஷம்? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இவரது இந்த பதிவிற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.