பெரியார் பிறந்த மண்ணில் , ஆளுநராக இருக்கும் ஆர்.எம் ரவி எது பேசினாலும் ஒன்றும் செய்ய முடியாது என தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடசாரிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து உரையாற்றினர் .
அந்தவகையில் இக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது :
இந்திய அரசியலமைப்பு சட்டம் சட்ட மேதை அம்பேத்காரால் உருவாக்கப்பட்டது . நாட்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையே ஒழித்து ஒற்றை ஆட்சி கொண்டுவந்து விடுவார்கள், அதற்கு நம் இந்தியா கூட்டணி வெற்றிப்பெற வேண்டும்.
ஆளுநர் ரவிக்கு பூணூல் போடுவது தான் வேலையா? அதற்கு தான் ஆளுநரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்களா? தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசி வருகின்றார்.
நந்தனார் பிறந்த ஊரில் பூணூல் போடும் ஆளுநரே நந்தனாரை கோவிலுக்குள் நுழைய வைக்க முடியுமா? இது பெரியார் பிறந்த மண், ஐ.பி.எஸ் படித்து விட்டு வந்து பேசும் ஆளுநர் ரவியால் இந்த மண்ணில் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .