ஒட்டன்சத்திரத்தில் அமைச்சர் சக்கரபாணி(sakkarapani) மாட்டு வண்டியை ஓட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை-திரூவாரூர்-ஒட்டன்சத்திரம் என வாரத்தின் எல்லா நாட்களும் சுற்றி சுழன்று வருகிறார்.
இந்த நிலையில்,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாட்டு வண்டியை அமைச்சர் சக்கரபாணி ஓட்டி மகிழ்ந்தார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
https://x.com/r_sakkarapani/status/1704869496669057516?s=20
நெடுநாட்களுக்குப் பிறகு ஒட்டன்சத்திரத்தில் உள்ள எனது தோட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாடுகளோடும், கன்றுகளோடும் சில நேரத்தை கழித்து, வெகு நாட்களுக்குப் பிறகு மாட்டு வண்டியையும் ஓட்டி மகிழ்ந்தேன்.
கடந்த காலத்தின் மகிழ்வான பல நினைவுகளுடன் சிறிது நேரம் திழைத்து இருந்தேன், அலுவல் மணி தொலைப்பேசியில் அடித்த வரை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.