செய்தித்துறை அமைச்சர் வெள்ளக் கோவில் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோடு கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.
கண்ணுக்குத் தெரியாமல் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிக உயிரிழப்பை உருவாக்கிய கொரோனா தொற்று குறைவடைந்த நிலையில், டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்து உருமாற்றங்கள் அடைந்து பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய ஒமைக்ரன் வைரஸ் தொற்று சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 40 கும் மேற்பட்ட மேற்பட்ட நாடுகளில் பரவியதை தொடர்ந்து இந்தியாவிலும் பல மாநிலங்களில் பரவி உள்ளது.
இந்த உருமாறிய ஒமைக்ரன் வைரஸ் தமிழகத்திலும் நையீரியாவில் இருந்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பரவியுள்ள நிலையில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை கட்டுப்படுத்தப்பட்டாலும் ஆங்காங்கே நோயின் தாக்கம் கண்டறியப்படுகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், சாமானியர் என பாரபட்சமின்றி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவில் தெரிந்துள்ளது. இதனால் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது