சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது :
தமிழ்நாட்டில் சிவராத்திரி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. அதிலும் எங்காவது பிரச்சனைகளை உருவாக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள், நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது திருக்கோவில்களில் சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருங்காலங்களில் இன்னும் சில கோவில்களில் சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படும்.
Also Read : எதற்கும் சளைத்த கட்சி அல்ல தவெக – 2 ஆம் ஆண்டு துவக்க விழாவில் விஜய் பேச்சு..!!
முதல்வரும் துணை முதல்வரும் உறவுக்கு கை கொடுப்பவர்கள் உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள். அதிலிருந்து என்னாலும் பின் வாங்க மாட்டார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மக்களைப் பிளவு படுத்துகின்ற சூழல் வரும்பொழுது இரும்பு கரம் கொண்டு அடக்கக்கூடிய முதல்வர் தமிழ்நாட்டு முதல்வர்,
திமுக தேசவிரோத ஆட்சி இல்லை தேசிய ஆட்சி.LKG, UKG பிள்ளைகள் போல மத்திய, மாநில அரசுகள் சண்டையிடுவதாக விஜய் விமர்சிக்கிறார். அரசியலில் திமுக பல PhD-களை முடித்த கட்சி என்பதை விஜய்க்கு சொல்லிக்கொள்கிறேன் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.