செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என உதயநிதி ஸ்டாலின்(Udayanidhi Stalin) கருத்து தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா கலந்து கொண்டு இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென் – இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில்
மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கடைசி வரை போராடி 2 வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்நிலையில் போட்டிகளை முடித்து அஜா்பைஜானில் இருந்து இன்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை, விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அயராத உழைப்பாலும் – தாயார் ஊட்டிய தன்னம்பிக்கையாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற #FIDEWorldCup2023-ல் 2-ஆம் இடத்தை பிடித்துள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் அவர்கள், கழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.
செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.