மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர்கள் பலரும் அவரவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில் கள ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் .

இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் நியமித்திருந்தார் அந்தவகையில் தற்போது அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை கள ஆய்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர் .
இதன் ஒரு பகுதியாக சென்னை புழல் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டி கரைகளில் தண்ணீர் வழிந்தோடிய நிலையில் ஏரியின் உறுதித்தன்மை குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர் ஏரிக்கு வினாடிக்கு 850 கனஅடி நீர் வரத்து உள்ள நிலையில் 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதகவம் சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதேபோல் அம்பத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அன்பில் மகேஷ் கூறியதாவது :
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை செய்து கொடுப்போம். வருங்காலத்தில் இதுபோன்ற வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் பகுதிகளில், JCB வாகனத்தில் வீடு வீடாக சென்று நிவாரணம் மற்றும் உணவுப் பொருட்களை அமைச்சர் எ.வ.வேலு விநியோகம் செய்தார்.
