MODI 3.0 : தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
“உலகின் முதலாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் பொற்காலத்தை அடைவதற்காக இலக்கை நோக்கிய பயணத்தில் படைக்க வேண்டிய அனைத்து சாதனைகளையும் உங்கள் தலைமையிலான இந்த அரசு படைக்கவும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மீண்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் சகோதரர் திரு. எல்.முருகன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்துவதோடு,
தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும் மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : June 10 Gold Rate : தங்கம் விலை சரிவு.. நகைப்பிரியர்கள் குஷி!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் வாழ்த்து..
இந்திய வரலாற்றில், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கும்,
அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதிலும்,
பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும் புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
பாஜக மநிலைத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமர் (MODI 3.0) பொறுப்பேற்று, சரித்திரம் படைத்திருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் புதிய அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றிருக்கும் அன்பு அண்ணன் திரு எல். முருகன் அவர்களுக்கு, பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமது பணிகள் அனைத்திலும் முத்திரை பதித்திருக்கும் அண்ணன் திரு எல் முருகன் அவர்கள், தனது புதிய பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுவார் என்பது உறுதி.” என பதிவிட்டுள்ளார்.