தமிழ் மொழியை விட சமஸ்கிருத்தத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியில் நாள் தொடங்கிய போதிலும், அதிக இடையூறு இன்றி அவைகள் மீண்டும் தொடங்கின. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர், எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகள் காரணமாக திங்கள் வரை, இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மீது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி நேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“சமூகநீதி,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம். நீங்கள் தோற்றிருக்கிறீர்கள். ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்பட தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றிய 20க்கும் மேற்பட்ட சட்ட வரைவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசின் கருவியாக மாநில ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும்,இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாடில் மட்டும் நிகழவில்லை. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ஆளுநர்களிடம் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தை கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
மேலும் இந்த முறை வழங்கபட்ட பட்ஜெட்டில் நீங்கள் திருக்குறளை மறந்துவிட்டீர்கள். ஏனெனில் இப்போது தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதால், “ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக துடிக்கிறது. மேலும் ஒருபோதும் இந்த நடைமுறையை செயல் படுத்த முடியாது என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும்,பிரதமர் மோடி தமிழின் மகத்துவத்தை பற்றி மோடி பேசி வருகிறார்.ஆனால், நிதி ஒதுக்கீடு என்று வரும்போது மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்துக்கு 198.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மத்திய செம்மொழி ஆய்வு மையத்திற்கு ரூ.11.86 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 முதல் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு 74 ஒரு கோடி நிதியை மட்டுமே வணக்கியுள்ளது அதே சமயம் மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு சுமார் 1487 கோடியை ஒதுக்கி உள்ளது அதாவது தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக அளவு நிலையை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.