தென் மாவட்டங்களில் விடிய விடிய மழை தொடரும் என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது..
“குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தென் கடலோர பகுதிகளில் தற்போது மிக கனமழை பெய்து வருகிறது. இம்மழை விடிய விடிய தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் இன்று இரவு விடிய விடிய மழை தொடரும் . கடலோர பகுதிகளான திருச்செந்தூர் காயல்பட்டினம் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
நெல்லையில் அதிகனமழைக்கு வாய்ப்பு :
ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று மாஞ்சோலை மலை மீது மோதுவதால் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளான மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய இடங்களில் இன்று இரவு அதீத கனமழைக்கு வாய்ப்பு பாபநாசம் மணிமுத்தாறு அம்பை கல்லிடையிலும் இன்று நல்ல மழை பெய்யும்.
இதையும் படிங்க : September 28 Gold Rate : தங்கம் விலை.. இன்றைய நிலவரம்?
மேலும் இராமநாதபுரம் தென்காசி விருதுநகர் குமரி ஆகிய 4 மாவட்டத்திலும் இன்று இரவு மழை பெய்யும்.
காயல்பட்டினம் எப்பவுமே ஸ்பெஷல் :
தமிழக வரலாற்றில் இடம் பிடித்த காயல்பட்டினம் எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. வடகிழக்கு பருவமழை காலத்தில் காயல்பட்டினம் திருச்செந்தூர் பகுதியில் பெய்யும் மழைக்கு தனி சிறப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.