மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து டிச.22ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக மழையால் ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்திலிருந்து 184 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்ட ஊட்டி மலை ரயில், கல்லாறு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் மண் சரிவு காரணமாக தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து டிச.22 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு காரணங்களால் 22 நாட்களுக்கு பிறகு கடந்த 14ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்த மலை ரயில் சேவை, மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.