சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் நடைபெற்ற கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கடந்த 5ஆம் தேதி அன்று சென்னை புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் ரிதம் என்ற இளைஞர் சராமாறியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்பகை காரணமாக ரிதம் கொலை செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவலில் தெரிய வந்தது.
மேலும் கை மற்றும் தலைப்பகுதியில் வெட்டு காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் இடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார் விசாரணையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விஜய் ரிதம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து சக்திவேல் நகரை சேர்ந்த டெல்லி பாபு என்பவனை அடித்துள்ளனர்.
இதனை அடுத்து டெல்லி பாபு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்து வகையில் நடந்து கொண்டதாக டெல்லி பாபு மற்றும் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் முன் ஜாமின் பெற்று வெளிவந்த இரு தரப்பினரும் பகை உணர்ச்சியோடு சுற்றித்திரிந்துள்ளனர் சமயம் கிடைக்கும் நேரத்தில் இரு தரப்பினரும் மோதிக் கொள்வது வழக்கமாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணி அளவில் டெல்லி பாபு, சரத்குமார் ,கோவிந்தராஜ், கார்த்திக், ஜெபஸ்டின் டேனியல், வினோத் ஆகிய ஆறு பேரும் கதிர்வேடு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்று மது அருந்திவிட்டு புழல் சைக்கிள் ஷாப் வழியாக திருவள்ளூர் தெருவிற்கு வந்துள்ளனர்.
அங்கு விஜய் மற்றும் ரிதம் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த டெல்லி பாபு தலைமையிலான கும்பல் தாங்கள் வாகனத்தில் வைத்திருந்த அருவாளை எடுத்து விஜய் கையில் வெட்டி உள்ளனர் அப்பொழுது சுதாரித்துக் கொண்ட ரிதம் விஜய் ஆகிய இருவரும்அருகில் இருந்த வீட்டின் மதில் சுவர் மீது ஏறி அங்கிருந்து தப்பித்துள்ளார்.
ஆனால் இருவரையும் பின் தொடர்ந்த டெல்லி பாபு தலைமையிலான கும்பல் லட்சுமி அம்மன் கோவில் தெரு அருகே ரிதம் மற்றும் விஜயை தலையில் தாக்கியுள்ளனர் இதில் ரிதம் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறையினர் வருவதைப் பார்த்த டெல்லி பாபு தலைமையிலான கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜய் மற்றும் ரிதம் ஆகிய இருவரையும் அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ரிதம் பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் உயிர் ஆபத்தான நிலையில் விஜய் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து சம்பவத்தை அரங்கேற்றியது யார்? என்பதை குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
முதற்கட்ட தகவலில் தங்களை தாக்கியது சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்த டெல்லி பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் என தெரிய வந்தது இதனை அடுத்து காவல்துறை இரு பிரிவுகளாக பிரிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இன்று டெல்லி பாபு உட்பட ஆறு பேரை கைது செய்தது புழல் காவல் துறையினர் .
முன்பகை காரணமாக வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது கைது செய்த 6 பேர் கொண்ட கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் தமிழகத்தில் கொலை கொள்ளை என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.