சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜாவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவருக்கு கருத்து சுதந்திரம் இல்லையா? என நடிகை குஷ்பூ கேள்வியெழுப்பியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்து அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. இந்த விவகாரத்தால் கடுமையான விமர்சனத்திற்கு இளையராஜா தள்ளப்பட்டார்.
அம்பேத்கரின் சட்டதிட்டமே பிரதமர் மோடியின் சித்தாந்தத்திற்கு எதிரானது தான்.பின்னர் எப்படி அம்பேத்கருக்கு இணையாகுவார் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பறந்தன. இதுகுறித்து பல்வேறு விவாதங்களும் நடைபெற்றது. இந்த நிலையில் இளையராஜா தனது கருத்தை திரும்பப்பெற போவதில்லை என கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளைராஜா மீது தூவப்படும் கடுமையான விமர்சனம் குறித்து சென்னையில் நடிகை குஷ்பூ பேட்டியளித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது;
மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று இடதுசாரி எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
ஆனால் இன்று அம்பேத்கர் – மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை? அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.