மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரு கைகளையும் இழந்த நபர் கற்களை எரிந்து கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரது கடையை இடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது,
கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ராமநவமி ஊர்வலத்தின் போது மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களில், பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில் வாற்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு நுழைந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் ஒரு சில இடங்களில் முஸ்லிம்களின் வீடு, கடைகள் மீதும், மசூதிகள் மீதும் தாக்குதல் நடத்தினர். ஒரு சில பகுதிகளில் மசூதிகள் மேல் ஏறி காவி கொடிகளை ஏற்றி வெறுப்பு கோஷங்களும், ஜெய் ஸ்ரீராம் முழக்கங்களையும் எழுப்பி, கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தின்போது பெரும்பாலான இஸ்லாமியர்கள் வீடுகள்,கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.மேலும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் ஒரு சில பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக எதிர்த்து கற்களை வீசி, கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் கலவரத்திற்கு காரணமான இந்துத்துவ அமைப்பினர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, இஸ்லாமியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இஸ்லாமியர்களின் வீடு மற்றும் கடைகளை புல்டோசர்களை வைத்து இடித்து தள்ளியுள்ளதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதில் அவலமான விஷயம் என்னவென்றால், கடந்த 2005 ஆம் ஆண்டு மின்சாரம் தாக்கி இரு கைகளையும் இழந்த வாசிம் சேக் என்பவர் மீது கலவரத்தின்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறி அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது சிறிய கடையையும் புல்டோசர் வைத்து இடித்து தள்ளியுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Terming him a "stone pelter", a gumti (shop) of Wasim Shaikh was razed by @CollecterK on April 11.
Shaikh's hand were amputated in 2005 after he sustained injuries from electric current.
Father of two, Shaik has a family of 5 to feed. Yet, admin razed his shop. pic.twitter.com/zmDS5xPwM4
— काश/if Kakvi (@KashifKakvi) April 18, 2022
இரு கைகளை இழந்த ஒருவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறி வழக்கு பதிவு செய்து, மிகவும் ஏழ்மையான நிலையில் கைகள் இல்லாமல், பிழைப்புக்காக வைத்திருந்த கடையை இடித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.