முத்துராமலிங்க தேவர் குரு பூஜை முன்னிட்டு பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜை இந்த ஆண்டு அக்டோபர் 27 முதல் 30ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும், குருபூஜையின்போது ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு இந்த தங்கக் கவசம் அணிவிக்கப்படும். மற்ற நாட்களில் இந்த தங்கக் கவசம், அதிமுக சார்பில் மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி கிளையில் பாதுகாக்கப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு அதிமுகவில் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே உட்கட்சி பூசல் காரணமாக தங்கக் கவசத்தை யாரிடம் வழங்குவது குறித்து குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
இந்த நிலையில் தேவர் சிலையில் அணிவிப்பதற்காக வங்கியில் உள்ள தங்கக் கவசம் அதிமுக பொருளாளராக தற்போது உள்ள திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வழியுறுத்தப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தலையிட வாய்ப்பு இருப்பதால்மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை கடந்த 10-ம் தேதி தங்க கவத்தை வங்கி நிர்வாகம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
அதன் அடிப்படையில் அண்ணா நகர் வங்கியில் வங்கி மேலாளர் முன்னிலையில் கையெழுத்திட்டு தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் பூஜைக்கு விழாவுக்காக இன்று பெற்று கொண்டார்.