நாகப்பட்டினம் – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை வெற்றிகரமாக தொடங்கப்பட உள்ளது .
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு கடந்த 10ம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த கப்பல் போக்குவரத்து சேவையின் துவக்க தேதி மாற்றப்பட்டது .
இந்நிலையில் இந்தியாவின் நாகப்பட்டினம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பணிகள் கப்பல் சேவை நாளை காலை வெற்றிகரமாக தொடங்குகிறது
பயணிகள் முனையத்தில் குடியுரிமை, சுங்கத்துறை ஆகிய பிரிவுகளின் சார்பில் சோதனை செய்யும் கருவி உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன
தொடக்க நாளை ஒட்டி நாளை ஒருநாள் மட்டும் கட்டணம் ₹3000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 35 பயணிகள் நாளை இலங்கை செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.