நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அச்சம் காரணமாக முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் தடுப்பூசி குறித்து பொதுமக்கள் மத்தியில் அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளதவர்களையும் தடுப்பூசி போட வைப்பதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தமிழ்நாட்டில் மதுரை, கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாத வணிக நிறுவனங்கள், மக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.