படுகொலைகள் பல செய்த பயங்கரவாதிகளை விடுதலை செய்யப்போவதாக பரவும் வதந்திகளுக்கு தமிழக அரசு உடன் மறுப்பு வெளியிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நாராயணன் திருப்பதி கூறிருப்பதாவது :
அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளன்று, முஸ்லிம் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை விடுதலை செய்யக் கோருவது கடும் கண்டனத்துக்குரியது.
மத அடிப்படையில் இந்த கோரிக்கையை முன் வைப்பது இஸ்லாமிய மதத்தையே இழிவுபடுத்தும் செயல். படுகொலைகள் பல செய்த பயங்கரவாதிகளை விடுதலை செய்யப்போவதாக பரவும் வதந்திகளுக்கு தமிழக அரசு உடன் மறுப்பு வெளியிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.