பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி. புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பதவியில் இருந்து விலகினார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்தித்தை பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்து உள்ளார்.
இந்தியாவில் 543 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இது குறித்து தேர்தலின் இறுதி முடிவானது நேற்று வெளியானது. நேற்று காலை 8 மணியளவில் தொடங்கி 10 மணி வரை நடத்தப்பட்டது.
மேலும் பெரும்பான்மை 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் 292 இடங்களை பாஜக ( தேசிய ஜனாயக கூட்டணி ) கைப்பற்றியது. காங் – 234 (இண்டியா கூட்டணி ) கைப்பற்றியது. மேலும் மற்றவை – 17 கைப்பற்றியது.இதனையடுத்து பாஜக 400 இடங்களை வெல்லும் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 300 இடங்களை கூட பாஜகவால் வெல்லமுடியவில்லை.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல் : தோல்வியைத் தழுவிய BJP- வின் Star Candidate!
இந்த சூழலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.அப்போது புதிய அமைச்சரவை பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்.மேலும் பிரதமர் மோடி பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது மோடியுடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.வரும் ஜூன் 7ஆம் தேதி தேசிய ஜனாயக கூட்டணி எம்பிக்கள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஜூன் 8 ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.