38 எட்டு கட்சிகள் கலந்து கொண்ட தேசிய ஜனநாயக ஆலோசனை பொது கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2024 மக்களவை தேர்தலுக்கு ஆளும் பாஜக அரசும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆயத்தமாகி வருகின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்ற பெயரில் டெல்லியில் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த பொது கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அதிமுக,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ்,புதிய தமிழகம்,ஐஜேகே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேமுதிகாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் பாஜகயுடன் தேமுதிக கூட்டணி வைத்து அனைத்து தொகுதிகளும் தோல்வியை தழுவியது.ஆனால் அப்போது பிரேமலதா விஜயகாந்த்தின் தேர்தல் பிரச்சார பேச்சை பிரதமர் மோடி பாராட்டி இருந்தார். இதனையடுத்து 2019 ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக கூட்டணி இடம் பெற்று இருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் தேசிய ஜனநாயக ஆலோசனை பொது கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்படாதது அக்கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் அமமுக, ஓபிஸ் ,மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.