PM Modi Interview அருணாச்சல் பிரதேசம் இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தலைமையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்தும்,ஆளும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க NDA கூட்டணி அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஆங்கில நாளேடுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.அதில் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகிறது, அவ்வப்போது சீன அரசு பிரச்சினையை எழுப்புகின்றனர். அருணாச்சல பிரதேசம் பாதுகாப்பாக உள்ளதா ? மாநிலத்தின் ஒவ்வொரு பகுதிகளும் இந்தியாவிற்குள் இருப்பதை உறுதி செய்ய நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பாஜகவால் தான் தடுக்க முடியும் – பிரதமர் மோடி
இதற்க்கு பதில்அளித்த பிரதமர் மோடி ,”ஏன் இந்த சந்தேகம் இருக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அருணாச்சலப் பிரதேசம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும்.சூரிய உதயம் முதலில் வடகிழக்கு மாநிலங்களுக்கு வருவது போன்று, நாட்டின் வளர்ச்சியையும் பாஜக அரசு அங்கிருந்தே தொடங்குகிறது.
கடந்த மாதம், இட்டாநகருக்குச் சென்றேன் .அங்கு ரூ.55,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.மேலும் அருணாச்சலப் பிரதேசத்தில் சுமார் 35,000 குடும்பங்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது , மேலும் 45,000 குடும்பங்கள் குடிநீர் விநியோகத் திட்டத்தால் பயனடைந்தன.
இதையும் படிங்க: தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்த பிரதமர் மோடி..!!
குறிப்பாக உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை அருணாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.2022 ஆம் ஆண்டில், நாட்டின் மற்ற பகுதிகளுக்கு மேம்படுத்தப்பட்ட விமான இணைப்புகளுக்காக டோனி போலோ விமான நிலையத்தை திறந்து வைத்ததாக தெரிவித்தார்
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 125 கிராமங்களுக்கு புதிய சாலைத் திட்டங்களையும், 150 கிராமங்களில் சுற்றுலா மற்றும் பிற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களையும் தொடங்கினோம். வடகிழக்கு பிராந்தியத்தில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான UNNATI திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி பட்டியலிட்டார்.