நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம், கோவிட் -19 காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் இருந்த சோனியா காந்தி, தனது நோய் குறித்து அமலாக்க துறைக்கு கடிதம் எழுதி, விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் 75 வயதான சோனியா காந்தி, டெல்லியின் சர் கங்கா ராம் மருத்துவமனையில் இருந்து ஜூன் 20ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஜூன் 2ஆம் தேதி அவருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதியானது. பணமோசடி வழக்கில் ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்காக காங்கிரஸ் தலைவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.