National Highway Projects ஒரு லட்சம் கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள துவாரகா விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி
நேற்று திறந்து வைத்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமுக்கு வருகை நேற்று வருகை தந்தார்.
மதியம் 12 மணிக்கு நடைபெற்ற விழாவில் சுமார் ரூ.4,100 கோடி மதிப்பிலான நாடு முழுவதும் 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிங்க: ”CAA-வை அமலுக்கு கொண்டு வந்த மத்திய அரசு..”பாஜகவின் அடுத்த நகர்வு?
இந்த திட்டத்தின் மூலம் டெல்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்தை மேம்படுத்தவும், நெரிசலைக் குறைக்கவும், துவாரகா -ஹரியானா தேசிய நெடுஞசாலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து, டெல்லி, உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.20,500 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளையும் பிரதமர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: JustNow | அடிப்படை விஷயங்களை படியுங்கள் விஜய் – அமர்பிரசாத்
மேலும் ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ரூ.32,700 கோடியில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அவர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலையின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும்(National Highway Projects),
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தவும் உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.