நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘ஊர்குருவி

Nayanthara-Vignesh-Shivan-presents-kavin-starrer-oorkuruvi
Nayanthara Vignesh Shivan presents kavin starrer oorkuruvi
Spread the love

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’ படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த நடிகர் கவின் நடிப்பில் சமீபத்தில் ‘லிஃப்ட்’ வெளியாகி கவனம் ஈர்த்தது.‘ஆகாஷ்வாணி’ என்ற வெப் சீரிஸில் கவின் நடித்து முடித்துள்ளார். இதனை அடுத்து நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ வெற்றி படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடமும் விக்னேஷ் சிவனிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இயக்குகிறார்.

Nayanthara-Vignesh-Shivan-presents-kavin-starrer-oorkuruvi
Nayanthara Vignesh Shivan presents kavin starrer oorkuruvi

முற்றிலும் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. தென்மாவட்டங்களிலும் ‘ஊர்குருவி’ படத்தை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Spread the love
Related Posts