தமிழக மீனவர்களை தடுப்புக்காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

tamil nadu fishermen arrested by the Sri Lankan Navy

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களை, வருகிற 28 ஆம் தேதி வரை காரைநகர் கடற்படை முகாமில் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 23 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

tamil-nadu-fishermen-arrested-by-the-Sri-Lankan-Navy
tamil nadu fishermen arrested by the Sri Lankan Navy

அதனைத் தொடர்ந்து மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டனர்.
இதனை அடுத்து மீனவர்களை வருகிற 28ஆம் தேதி வரை காரை நகர் கடற்படை முகாமில், தனிமைபடுத்தி காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts