லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய திரையுலகில் கால்பதித்து தனது கடின உழைப்பால் தற்போது வேர்ல்ட் பேமஸ் நடிகையாக உருமாறியுள்ளவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .
இந்நிலையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாராவின் 75வது படமாக வெளியான அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் ஓரளவு டீசெண்டாக ஓடிய இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தற்போது இதுகுறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது . அதன்படி ‘அன்னபூரணி’ படம் வரும் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.