எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய உள்துறை மும்முரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Also Read : மேற்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை – தமிழ்நாட்டின் அடுத்த பாஜக தலைவர் யார்..?
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவைக்கு பதில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள மோடி தலைமையிலான இந்த மத்திய அமைச்சரவையில் நாட்டுக்கும் நாட்டு மக்களும் உதவும் வகையில் பல புதிய சட்டங்கள் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வந்துள்ள இந்த புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் மத்தியில் பல வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது.