பேருந்துகளில் கொடுக்கப்படும் பயணச்சீட்டை எச்சில் தொட்டு கொடுக்கக்கூடாது என சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொதுவாக அரசு பயணிகள் பேருந்துகளில் டிக்கெட் கொடுக்கும்போது பெரும்பாலும் டிக்கெட்டை எச்சில் தொட்டு கொடுக்கும் பழக்கம் நடத்துனர்களிடம் இருந்து வருகிறது. இது பயணிகளுக்கு பலநேரங்களில் ஒருவிதமான அசௌகரியத்தையும், சுகாதார சீர்கேட்டையும் விளைவிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில், எச்சில் தொட்டு டிக்கெட் கொடுப்பதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்;
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துநர்கள் பயணச்சீட்டு வழங்கும்போது எச்சில் தொட்டு கொடுக்க கூடாது; இதனால் பயணிகளுக்கு மன உளைச்சலும், சுகாரதார சீர்கேடும் ஏற்படுவதால் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் எச்சிலுக்கு பதிலாக தண்ணீரை உறிஞ்சும் Sponge-ஐ பயன்படுத்த வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.