கனடாவின் நியூ ஃபவுன்ட் லேண்ட் பகுதியில் இருந்து சுமார் 400 கடல் மைல் தொலைவில் உலக புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல்(titanic ship )பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.
2200 சுற்றுலா பயணிகளுடன் சென்ற அந்தக் கப்பல் தண்ணீரில் மூழ்கியதில் ஒரு சிலர் மட்டுமே உயிர் தப்பினார்கள் மற்ற அனைவரும் உயிரோடு கடலில் ஜல சமாதி அடைந்தனர். டைட்டானிக் கப்பல் மூழ்கிய கதை திரைப்படமாக படம் பிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பெறும் வசூல் சாதனையை எட்டியது.
டைட்டானிக் கப்பல் (titanic ship) இரண்டு பாகங்களாக உடைந்து கடலில் விழுந்ததால், மூழ்கிய இடத்தில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டைட்டானிக் கப்பல் இரண்டு பாகங்களாக உடைந்ததால் அதன் நடுவே மூன்று சதுர கிலோமீட்டர் சுற்றளவில் கடலுக்கு அடியில் அதன் உடைந்த பாகங்கள் சிதறி கிடக்கின்றன.
இந்த அரிய பொக்கிஷத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட நிறுவனம் ஒன்று இரண்டு நீர்மூழ்கி கப்பல்களை பயன்படுத்தி ஆழ் கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக்கின் கப்பலை மொத்தம் ஏழு லட்சம் புகைப்படங்களை ஸ்கேன் செய்து எடுத்துள்ளன.
இந்த புகைப்படங்களில் ஒன்றில் காணாமல் போன நெக்லஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதனை மேலும் தீவிரமாக சோதனை இட முடியவில்லை.
இருப்பினும் செயற்கை நுண்ணறிவின் மூலம் அந்த நெக்லஸின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து.
அதில் யார் கழுத்தில் இந்த நெக்லஸ் இருந்தது என்பதை கண்டுபிடித்து அதன் உண்மையான உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது ஒரு சவாலான பணி என்றும் மிகவும் அழகான பிரமிக்க வைக்கும் செயல் இது என்றும் டைட்டானிக் கப்பலை படம் பிடித்துள்ள ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் பார்க்கின்சன் தெரிவித்துள்ளார்.