கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்து பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்த வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வீரர்களும் கட்டாயம் விளையாட வேண்டும்.
போட்டிகளின் போது அனைத்து வீரர்களும் அணியுடன் ஒன்றாக பயணிக்க வேண்டும். தனியாக பயணம் செய்ய கூடாது.
குறிப்பிட்ட அளவு உடைமைகளையே கொண்டு வர வேண்டும், அதை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் வீரரே அதன் செலவை ஏற்க வேண்டும்.
மேலாளர், சமையல் உதவியாளர் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களை வீரர்கள் உடன் அழைத்து வரக்கூடாது.
Also Read : வெளியானது விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் – படம் எப்போ ரிலீஸ் தெரியுமா..?
பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரம் கிளம்ப கூடாது. அனைத்து வீரர்களுடனும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்.
போட்டிகள் நடைபெறும் காலத்தில் தனிப்பட்ட விளம்பர படப்பிடிப்புகள் உள்ளிட்டவை நடத்த அனுமதி இல்லை.
விதிமுறைகளில் தளர்வுகள் ஏதும் வேண்டும் எனில் பயிற்சியாளர், கேப்டன், தேர்வுக்குழு உள்ளிட்டோரின் அனுமதி பெற வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சில நட்சத்திர வீரர்கள் விளையாடாமல் இருக்கும் நிலையில் இதுகுறித்து பல புகார்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு பிசிசிஐ இந்த விதிமுறைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.