ரெயில் நிலையத்தில் புதுமணத் தம்பதிகள் போட்டோஷூட் பண்ணலாம் – எங்க தெரியுமா?

மதுரை ரெயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் (photo shoot) நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளின் திருமண போட்டோஷூட் (photo shoot), வித்யாசமான பத்திரிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள், பெரிய அளவில் புதுமை கலந்து இருக்கும் பட்சத்தில் அவை நெட்டிசன்கள் மத்தியில் கூட அதிக கவனம் பெற்றும் வருகின்றது.

அந்த வகையில், திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்துவதற்கு மதுரை ரெயில் நிலையத்தில் அனுமதி அளித்து மதுரை ரெயில் நிலைய மேலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மதுரை ரெயில் நிலையத்தில், திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்துவது தொடர்பான அறிவிப்பில்,

மதுரை ரெயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் போட்டோஷூட் நடத்தலாம் எனவும், போட்டோஷூட் நடத்துவதற்கு ரூ.5,000 செலுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரெயிலின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள கூடுதலாக ரூ.1,500 செலுத்த வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts