2.0 திட்டத்தில் சென்னையில் 500 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட தரமற்ற சாலைகள் குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சர் .பிட்டி. தியாகராயரின் 173 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலையின் கீழ் வைக்கப்பட்ட படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ் பாபு, ஆர்,எஸ்,ராஜேஷ், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன்பின்னர், செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்படி சென்னையில் 500 கோடி ரூபாயில் சாலைகள் போடப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது.
உரிய ஆய்வுகளுக்குப் பிறகு சாலைகள் அமைக்கப்பட்டனவா? யாரிடம் சான்றிதழ் பெற்று அமைக்கப்பட்டது? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: பெண் வி.ஏ.ஓ வுக்கு வயிற்றில் உதை…. ஆணையரை மிரட்டி அடாவடி…. அத்து மீறும் திமுகவினர்
தமிழகத்தில் தற்போது ஒரு இடியமினின் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
அதிமுக கட்சித் தொண்டர்கள் இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கருத்து கூறினால் இரவோடு இரவாக அவர்களை கைது செய்து விடுவார்கள்.
ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரை கைது செய்து ஒரு மர்மமான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவர் எங்கு இருக்கின்றார் என்று யாருக்கும் தெரியவில்லை.

கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் இல்லை என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து உண்மையை விளக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
காவல்துறையினர் எஜமானராக இருக்கும் ஸ்டாலின் கூறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
காவல்துறை தற்போது ஏவல் படையினராகவே மாறிவிட்டது
எங்கள் ஆட்சி மலரும் பொழுது பொய் வழக்கு பதிந்த அனைத்து காவல்துறையினர் யாரும் தப்பிக்க முடியாது.
2015 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைபெற்ற இயற்கை பேரிடர்களுக்காக மத்திய அரசிடம், மாநில அரசு தரப்பில் ஒட்டுமொத்தமாக ரூ.1.50 லட்சம் கோடி நிவாரண நிதி கேட்டுள்ளோம்.
ஆனால் இதுவரை 7000 கோடி மட்டுமே மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கி உள்ளது.
மத்தியில் ஆளுகின்ற தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி தமிழகத்தை கண்டு கொள்வதில்லை.
வடக்கில் ஒரு நீதி; தெற்கில் ஓர் நீதி என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது
இதையும் படிங்க: திமுகவும் அதிமுகவும் கள்ளக்கூட்டணி போட்டுள்ளது – போட்டுத்தாக்கும் டிடிவி தினகரன்
உரிய அரசியலமைப்பு சட்டத்தினை அமல்படுத்தியிருந்தால் மாநிலங்களில் கொடுக்கப்பட்ட வரிப்பணத்திற்கு ஏதுவாக மக்களுக்கு மீண்டும் திரும்பி வந்து இருக்கும்.
அதை செய்யாமல் மாநில உரிமையை காப்போம் என ஸ்டாலின் சொல்வது கேலிக்கூத்தாக உள்ளது
திமுக அரசு தங்களின் குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு மேற்கொண்ட செயல்களை தவிர்த்து வேறு எந்த செயல்களும் செய்யவில்லை , தமிழக உரிமையை காக்க வேண்டும் என்பதே எங்களது கோஷம்.
மத்தியில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை.
வெற்றி பெறப் போகும் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்கிய மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா?