Amit Shah Road Show –பாராளுமன்ற தேர்தல் களம் புதிய சுறுசுறுப்பை எட்டியுள்ள நிலையில் தென் மாநிலங்களில் இந்த தடவை அதிக இடங்களில் வெற்று பெறும் நோக்கில் கடுமையாக களமாடி வருகிறது பாஜக. அந்த வகையில், கடந்த ஒரே மாதத்தில் மட்டுமே 2 முறை தமிழகம் வந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 9 ஆம்தேதி மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார்.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று (04.04.2024) தமிழகம் வருகிறார்.
இன்று இரவு மதுரை வரும் அமீத்ஷா விமான நிலையத்தில் இருந்து நேராக பசுமலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

நாளை காலை 9 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய்யும் அவர், பின்னர் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடி செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவநாதன் யாதவிற்கு வாக்குகளை கேட்டு ‘ரோடு-ஷோ’ நடத்துகிறார்.
முன்னதாக காலை 10 மணியளவில் அழகப்பா பல்கலைக்கழக ஹெலிபேட் தளத்தில் இறங்கி அங்கிருந்து காரில் பெரியார் சிலை வந்தடைகிறார். தொடர்ந்து பெரியார் சிலை முதல் அண்ணாசிலை வரை சாலையில் நடந்து சென்று தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்கிறார். அவருடன் வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் மோடி, அமித்ஷா வருகை! – தயாராகும் தமிழகம்!
இதையடுத்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்லும் அமித்ஷா, இலஞ்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் நாளை மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கி நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.
தென்காசி மத்தளம் பாறை விலக்கு பகுதியான ஆசாத் நகர் பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரத்தை தொடங்கும் அமித்ஷா அங்கிருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதன்பின் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதியம் 1.15 மணிக்கு காரில் மீண்டும் ஹெலிபேடு சென்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக அதே ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.முதலில் அவர் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் அதாவது ஆசாத் நகர் தொடங்கி புதிய பஸ் நிலையம் வரையிலும் ‘ரோடு-ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வந்த நிலையில், போக்குவரத்து நெருக்கடி காரணமாக 2 கிலோமீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவரது வருகையையொட்டி பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பின்னர் அவர் நாகர்கோவிலில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். முன்னதாக மதுரையில் இன்று இரவு பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் பிரசார திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ‘பாஜக கூட்டணியில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும் அமித்ஷா நாளை பரப்புரை நடத்துகிறார்’ எனவும் அதற்கேற்பவே அமீத்ஷாவின் பயணத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்முக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அவர்கள், “2 நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா நாளை தேனி பெரியகுளம் பகுதியில் 1 கி.மீ. வரை வாகனப் பேரணி சென்று அமித்ஷா தேர்தல் பரப்புரை செய்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன” என்றனர் அவர்கள்.