பெரிய பணமூட்டையுடன் ஹெலிகாப்டரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார் எனக் கர்நாடகா காங்கிரஸ் பரபரப்பு புகார் அளித்தது இது குறித்துத் தேர்தல் ஆணையம் தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் வரும் மே பத்தாம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராகத் தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அண்ணாமலை தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் உடுப்பியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாமலை ஹெலிகாப்டரில் பணக்கோட்டையுடன் வந்து இறங்கினார் எனக்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயகுமார் சுவரங்கி குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்துப் பேசிய அவர் தனக்கு வந்த தகவலின் படி அண்ணாமலை மூலமாக உடுப்பிக்குப் பணம் கொண்டுவரப்பட்டது என்றும், மேலும் இந்த சம்பவம் தொடர்பாகத் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளோம் என்றும் அவர் குற்றம் சாத்தியிருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளகவலைத்துள்ள அண்ணாமலை தரப்பு, ஹெலிகாப்டரில் பயணித்தது உண்மைதான் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டரில் தமாதத்தை தவிர்க்கவே பயணம் செய்தேன்.
ஆனால், காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு போல் பணம் எதுவும் கொண்டுவரப்படவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் கொண்டு வந்ததாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் அண்ணாமலை தங்கி இருந்த விடுதி மற்றும் ஹெலிகாப்டர்களை சோதனையைச் செய்தனர்.
அதில் எந்தவித பணமும் எடுத்து வர வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்தது கர்நாடக தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதணையில் ஈடுபட்டுள்ளனர்.