தமிழ் சினிமாவில் 90 களில் புகழ் பெற்ற நடிகை குஷ்பூவிற்கு கோவில் கட்டப்பட்டது. அதே போல் நடிகை சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஆந்திராவில் பெருமளவில் ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில், குண்டூர் அருகே உள்ள பாபட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டி வருகிறார்.
இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.இதுகுறித்து சந்தீப் கூறும்போது, “சமந்தா, பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு கூடியது.
இதனால் அவருக்கு கோயில் கட்ட தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது” என்றார்.
மேலும் நடிகைகள் குஷ்பு, நமீதா, ஹன்சிகா மோத்வானி மற்றும் நயன்தாரா அனைவருக்கும் அவர்களின் பெயரில் தமிழ்நாட்டில் உள்ள அவர்களின் ரசிகர்களால் கட்டப்பட்ட கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தத்து.