congress Candidates List | பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலானது இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டமானது இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சோனியா, ராகுல் காந்தி உட்பட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டம் முடிவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. அதில், கட்சியின் முக்கிய ஸ்டார் வேட்பாளர்களான ராகுல் காந்தி, முதன்முதலாக தனது அரசியல் இன்னிங்சில் காலடி வைக்கும் பிரியங்கா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்படாம் என்பதால் இது அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: ”நிக்க வச்சு சுடணும்” என்கிற மக்களின் உணர்வுடன் ஒத்துப் போகிறேன் -ஆளுநர் தமிழிசை!
தற்போதைய தகவலின் படி, காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தல் பயணத்தை உத்திரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான காரணங்களையும் நம்மிடம் பட்டியலிட்டனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் சிலர்.
இது குறித்து பேசிய அவர்கள், “உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் கோட்டையாக உள்ளது ரேபரேலிதொகுதி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 3 முறை போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் சோனியா காந்தியின் கோட்டையாகவும் விளங்கியது ரேபரேலி. இந்த தொகுதியில் 5 முறை போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வாகியுள்ளார் சோனியா.
இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1765687962057195618?s=20
அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் இரும்பு கோட்டையாக இருக்கும் தொகுதி ரேபரேலி” என்ற அவர்கள், தற்போது கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகும் காந்தி இம்முறை அமேதி தொகுதிக்கு திரும்பலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2019-ல் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.(congress Candidates List) அதேநேரம், கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதன் மூலம் ராகுல் மீண்டும் எம்.பி.யானார்.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸின் மற்றொரு கோட்டையான அமேதி தொகுதியை மீட்டெடுக்கும் வகையில் ராகுல் மீண்டும் இங்குகளமிறங்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அதேநேரம், வயநாடு தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என்று ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.